நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். மக்களவையில் காலை 11 மணிக்கு அவரது உரை தொடங்கும். மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது இது 8-வது முறையாகும்.. தொடர்ச்சியாக 8 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். இந்திய பட்ஜெட்டின் வரலாறு மற்றும் நிதியமைச்சரின் உரை குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டில் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் உரையாற்றிய மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். தனது உரையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொழில்முனைவோர் மற்றும் MSME துறைக்கான நன்மைகள் மற்றும் பிற முக்கிய விஷயங்களை கோடிட்டுக் காட்டிய 10-புள்ளி தொலைநோக்கு பார்வையை அவர் வழங்கினார்.
பின்னர் நிர்மலா சீதாராமன் 2020 ஆம் ஆண்டில் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் உரையாற்றி தனது சொந்த சாதனையை முறியடித்தார். இந்த பட்ஜெட் உரை தான் இன்று வரை வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையாகக் கருதப்படுகிறது.
நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்: ஜஸ்வந்த் சிங் தனது பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 13 நிமிடங்கள் நிகழ்த்தினார். தனது உரையில், உலகளாவிய சுகாதார காப்பீடு, வருமான வரி அறிக்கைகளை மின்னணு முறையில் தாக்கல் செய்தல் மற்றும் கலால் மற்றும் சுங்க வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் குறித்து பேசினார்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி: 2014 ஆம் ஆண்டு நாட்டிற்கு தனது பட்ஜெட் உரையின் போது ஜெட்லி 2 மணி நேரம் 10 நிமிடங்கள் பேசினார். இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவது. ரூ.2-2.5 லட்சம் அடுக்குக்குள் வரி விலக்கு அளிப்பது உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளை அவர் தனது உரையில் அறிவித்தார்.
நிதியமைச்சர் மன்மோகன் சிங்: 1991 ஆம் ஆண்டில் 18,700 வார்த்தைகளுடன், சொற்களில் மிக நீண்ட உரை நிகழ்த்திய சாதனையை ம்ன்மோகன் சிங் படைத்துள்ளார். 18,604 வார்த்தைகளுடன், அருண் ஜெட்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நிதியமைச்சர் ஹிருபாய் எம். படேல்: 1997 ஆம் ஆண்டில் வெறும் 800 வார்த்தைகள் கொண்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரையை படேல் நிகழ்த்தினார். அந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டைப் பொறுத்தவரை, தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் 2024 ஆம் ஆண்டில் 60 நிமிட உரையை நிகழ்த்தினார். இது தான் இன்று வரை நிர்மலா சீதாராமனின் மிகக் குறுகிய பட்ஜெட் உரையாகும்.
Read More : விவசாயிகளுக்கான கடன் ரூ.5 லட்சமாக உயர்வு..? பட்ஜெட்டில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்புகள்..