fbpx

Ration: இனி அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் கிடைக்கும்!… கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு!

Ration: ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் தொடர்ந்து காக்கப்பட்டு வருகின்றன.. இதனை தவிர, பண்டிகை காலங்களில் தீபாவளி, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷனில் வழங்கப்படுகின்றன..

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பொது மக்களுக்கு ஏதாவது புகார்கள் இருந்தால் அதை உடனடியாக தெரிவிக்க இலவச எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே நேரத்தில் வழங்காமல் பொதுமக்களை தினமும் கடைக்கு வர வைக்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

வெயில் காலம் துவங்கிவிட்டதால், பொதுமக்களுக்கு இதனால் தேவையில்லாத அலைச்சல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore:  69 மருந்துகளுக்கான விலை உச்சவரம்பு…! தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடி உத்தரவு…!

Kokila

Next Post

Resignation: புதுச்சேரி சிறுமி கொலை!… இன்று பந்த்-க்கு அழைப்பு!… கூண்டோடு ராஜினாமா!

Thu Mar 7 , 2024
Resignation: புதுச்சேரியில் 9வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் குழந்தைகள் நலக்குழு ஆணையம் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து போலீசார் […]

You May Like