fbpx

இனிமேல் Facebook-க்கும் ப்ளூடிக்!… சந்தா சேவை அறிமுகம்!… ட்விட்டரை தொடர்ந்து மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி!

ட்விட்டரைப் போல Facebook-க்கும் ப்ளூடிக் சந்தா சேவையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல சமூக வலைதளங்களான ட்விட்டர் தற்பொழுது உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளமாக மாறிவிட்டது. முன்னதாக, இந்த ட்விட்டரை உபயோகம் செய்யும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே ப்ளூடிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியவுடன் சந்தா செலுத்தினால் மட்டுமே ப்ளூடிக் வசதி உண்டு என்ற மாற்றத்தை கொண்டு வந்தார். அதிலிருந்து, பயனர்கள் பலரும் மாதம் சந்தா செலுத்தி ப்ளூடிக்கை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டரை போல பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவும் ப்ளூடிக் சந்தா சேவையான Meta Verified-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, மெட்டாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ப்ளூடிக்கை பெறுவதற்கு மாதத்திற்கு £9.99 (ரூ.1,026) செலுத்த வேண்டும். மேலும், சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் தகுதி பெற அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அம்சம் ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது இங்கிலாந்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

புதிய விளம்பரம்!... 5 மில்லியன் பயனர்களை தன்வசப்படுத்திய நெட்பிளிக்ஸ்!...

Fri May 19 , 2023
நெட்பிளிக்ஸின் புதிய விளம்பர ஆதரவு சந்தா திட்டம் 5 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை ஈர்த்துள்ளது. பிரபல ஸ்ட்ரீமிங் வீடியோ தளமான நெட்பிளிக்ஸின் புதிய விளம்பர ஆதரவு சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, 5 மில்லியன் (50 லட்சம்) மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை ஈர்த்துள்ளது என நெட்பிளிக்ஸின் உலகளாவிய விளம்பரத் தலைவர் ஜெர்மி கோர்மன் கூறியுள்ளார். நெட்பிளிக்ஸ் மாதத்திற்கு $10 (ரூ.824) முதல் தொடங்கும் […]
ஒரு மில்லியன் பயனர்களை இழந்த நெட்பிளிக்ஸ்..! திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

You May Like