நீரிழிவு நோயாளிகள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இனிப்பு துளசி ஒரு அருமருந்தாக விளங்குகின்றது.
என்னதான் நாவை அடக்க முயற்சித்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பைத் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. விளைவு இரத்த சர்க்கரை கட்டுக்கடங்காமல் போய் பல்வேறு மோசமான உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதைத் தடுக்க தற்போது இனிப்பு துளசி ஒரு அருமருந்தாக விளங்குகின்றது. துளசிச் செடியில் பல வகைகள் உண்டு. பச்சை துளசி இது மிகவும் பொதுவான துளசி வகைகளில் ஒன்றாகும். இது புனித துளசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த துளசியை வீட்டில் நட்டு வழிபட்டால் குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இது கோயில் தீர்த்தம், தேநீர், கசாயம் போன்ற வழிகளில் மக்கள் உட்கொள்கின்றனர்.
ஸ்ரீ துளசி என்றும் அழைக்கப்படும் ராம துளசி நோய் தீர்க்கும் தன்மை கொண்டது. இந்த துளசி சற்று இனிமையான சுவையும் வாசனையும் கொண்டது. இந்த துளசி மத மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஊதா இலை முளைக்கு இது கிருஷ்ண துளசி என்று அழைக்கப்படுகிறது, இலைகள் தனித்துவமான நிறம் மற்றும் மிருதுவான உணர்வைக் கொண்டுள்ளன. கிருஷ்ண துளசி தொண்டை தொற்று, சுவாச பிரச்னைகள், நாசி புண்கள், காதுவலி, தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. காட்டு துளசி என்றும் அழைக்கப்படும் வன துளசி பொதுவாக இமயமலை சாரலில் வளர்கிறது. இது ஒரு வலுவான வாசனையைக் கொண்டுள்ளது, வன துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த துளசி உங்களது இளமையை மேம்படுத்தும்.
கபூர் துளசி நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, இதன் இனிமையான வாசனை பூச்சிகள் மற்றும் கொசுக்களைத் தடுக்கும். மனிதர்களைக் கொல்லக்கூடிய சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த துளசி வகைகள் எல்லாம் காய்ச்சல், தோல் வியாதிகளை போக்கி ஜீரணம், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. துளசி தண்ணீர் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. கெட்ட சுவாசம் இருந்தால் துளசியை பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு மருந்தாகச் செயல்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்சிடெண்ட் சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.
இனிப்பு துளசிக்குத் தனித்தன்மை உள்ளது. இனிப்புத் துளசியின் பொடியை காபி, டீ , சோடாக்களில் பயன்படுத்திகிறார்கள். இந்த இலை இனிப்பில் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இனிப்புத் துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். இதன் பூர்வீகம் பராகுவே நாடு. ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா, தாய்லாந்து நாடுகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் வளர்கிறது. சீனி துளசி செடி சாதாரண மரக்கன்றுகள், செடிகள் விற்றும் நர்சரிகளில்கூட கிடைக்கும். இதை மாடித்தோட்டம் அமைத்து வளர்க்கலாம். வசதிக்கேற்ப சிறிய தொட்டியில்கூட துளசி செடியை வளர்த்து பயன்பெறலாம். மனிதனின் தினசரி உனவு முறைகளுள் சர்க்கரை முக்கியப் பங்கு வகிக்கிறது.
சாதாரணமாக பயன்படுத்தும் ஜீனி எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது தவிர நாட்டு சர்க்கரையும் பனை வெல்லமும் இனிப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதற்குப் பதிலாக இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை, கலோரிகளை உருவாக்குவதில்லை. செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். இனிப்புத் துளசியின் இலைகளில் நிறைந்துள்ள ஸ்டீவியோசைடு, ரெபடையோசைடு எனும் வேதிப்பொருள்கள் இனிப்புத்தன்மைக்கு காரணமாக இருக்கின்றன.
இதனால் கரும்புச் சர்க்கரையுடன் இனிப்பு துளசியில் உள்ள தித்திப்பு 30 மடங்கு அதிகமாக இருக்கும். ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பு சுவையின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகம். இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் 15- முதல் 20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு காணப்படுகிறது. உலர் இலைகளில் ரெபடையோசைடு – ஏ 2-4 சதவிகிதமும் உள்ளது. இது தவிர கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.
இருப்பினும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை இனிப்பு துளசி அதிகரிக்கச் செய்வதில்லை. இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளின் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவதில்லை. ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி, ஐஸ்கிரிம், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் ,பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தலாம்.