fbpx

’இனி எங்குப் பார்த்தாலும் மழைதான்’..! ’குடையை மறந்துறாதீங்க’..! கனமழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி, டெல்டா மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

’இனி எங்குப் பார்த்தாலும் மழைதான்’..! ’குடையை மறந்துறாதீங்க’..! கனமழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

நாளை தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள்‌ புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

’இனி எங்குப் பார்த்தாலும் மழைதான்’..! ’குடையை மறந்துறாதீங்க’..! கனமழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’பொன்னியின் செல்வன்’..! ரூ.50 கோடிக்கு வியாபாரத்தை முடித்த சன் டிவி..! அதிருப்தியில் கலைஞர் டிவி..!

Tue Aug 23 , 2022
”பொன்னியின் செல்வன்” படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உரிமைகளை சன் தொலைக்காட்சி சுமார் 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான ”பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது முதல் பாகம் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே […]
’பொன்னியின் செல்வன்’..! ரூ.50 கோடிக்கு வியாபாரத்தை முடித்த சன் டிவி..! அதிருப்தியில் கலைஞர் டிவி..!

You May Like