fbpx

‘இனி ரயிலில் இவர்களுக்கு மட்டும் தான் லோயர் பெர்த் கிடைக்கும்’..!! இந்திய ரயில்வே அதிரடி..!!

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு தான். ரயில் பயணம் மற்றும் டிக்கெட் ஒதுக்கீடு குறித்த முக்கிய அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பெட்டியின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே முக்கிய முடிவை எடுத்துள்ளது.

தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகின்றனர். பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த். ஆனால், இப்போது சாதாரண பயணிகளால் இந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆம், இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரயிலின் கீழ் பெர்த் சில வகை மக்களுக்கு ஒதுக்கப்படும். ரயில்களில் லோயர் பர்த்கள் யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக ரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

பெரியவர்களுக்கு அதற்காக தனியாக கோராமலேயே இந்திய ரயில்வே லோயர் பெர்த்தை தருகிறது. அதேபோல் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் இதற்கான விருப்பத்தை (ஆப்ஷன்) தேர்ந்தெடுக்காமலேயே இந்த பர்துகளை பெற முடியும். ஒரு மூத்த குடிமகன், மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றோர் அல்லது கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது TT அவர்களுக்கு கீழ் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளது.

ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 இருக்கைகள், அதாவது 2 கீழ் இருக்கைகள் 2 நடு இருக்கைகள், தர்ட் ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி 3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கரீப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, மூத்த குடிமக்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சில் 4-5 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3-4 லோயர் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை

  • IRCTC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • உங்கள் கணக்கில் உள்நுழையவும் / பதிவு செய்யவும்.
  • பின்னர் உங்கள் பயண விவரங்கள்/தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • ரயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
  • Book Now விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பயணிகள் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும்.
  • கட்டண முறையைத் தேர்ந்தெடுந்த பின், இந்த செயல்முறையை முடித்த பிறகு உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.

Chella

Next Post

த்ரிஷா இதுவரை குவித்து வைத்திருக்கும் பணம் எத்தனை கோடி தெரியுமா..? விரைவில் அந்த இலக்கை தொட போகுது..!!

Fri Oct 27 , 2023
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகி இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர் த்ரிஷா. கடந்த 1999இல் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா. பின்னர், கடந்த 2000இல் ரிலீஸான சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரியை தமிழ் ரசிகர்கள் எப்போதுமே ரசிப்பார்கள். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு விஜய்-த்ரிஷா […]

You May Like