பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் முக்கிய பிரச்சனையாக உள்ளது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் ஆகும். மின்தடையின்போது அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்து புகார் அளித்தும் பிரச்சனையாக சரி செய்யப்படாமல் இருந்த அனுபவம் பலருக்கும் கிடைத்து இருக்கும்.
இந்நிலையில், மின்சாரம் தொடர்பாக தற்போது உள்ள குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பு மற்றும் மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் தொடர்பான விரிவான தகவல்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.
சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள தெருவிளக்குப் பெட்டி மற்றும் மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் கம்பிகள் தொடர்பாக நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் படம் எடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் என்களுக்கு அனுப்பலாம். சென்னை – 9445850829, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் – 9444371912, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி – 9442111912, சேலம், ஈரோடு, நாமக்கல் – 9445851912, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை – 9443111912, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் – 8903331912, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் – 9486111912, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி – 6380281341, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் – 9445855768.
மின்மாற்றி, கம்பம், தெருவிளக்குப் பெட்டி, மின்விநியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான, அதிகமான மின் அழுத்தப்புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து, பட்டியிடல் புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்களுக்கு மின்னகம் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம்.
மின் திருட்டு: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, என்கிற 4 கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு உதவி செயற்பொறியாளரின் தலைமையின் கீழும் 21 அமலாக்கக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டுள்ளன. இந்த அமலாக்கக் குழுக்களுக்கு கூடுதலாக இரண்டு பறக்கும் குழு /சென்னை மற்றும் உளவுத்துறை பிரிவுகள் அமலாக்கத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்து 23 குழுக்களும் சென்னையிலுள்ள அமலாக்கப்பிரிவின் மேற்பார்வை பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது. இந்த அமலாக்க குழுக்களுக்கு புகார்களின் தெரிவிக்க ig@tnebnet.org, ig@tnebnet.org மற்றும் ceapts@tnebnet.org, ceapts@tnebnet.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.