நுங்கு சாப்பிடுவதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல் சூட்டை தணிக்கவும் அதோடு உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் அருமருந்தாகும். வெயில் கால நோய்களை கட்டுப்படுத்தவது இது பயன்படுகிறது.
கோடை சீசனில்தான் நுங்கு வரத்து அதிகரிக்கும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், பனைமரத்தில் இருந்து கள் உள்ளிட்ட பானங்களும் அதிகளவில் கிடைக்கும். அந்தவகையில் நுங்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல் சூட்டை தணிக்கவும் அதோடு உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. ஐஸ் ஆப்பிள் என செல்லமாக அழைக்கப்படும் நுங்கை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் குறித்தும் இதில் பார்க்கலாம்.
வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய பல சத்துக்களை கொண்ட நுங்கு, வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.இரத்தசோகை உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.