fbpx

“மக்களே கவனம்” இன்று முதல் அமலுக்கு வரும் 4 புதிய முக்கிய மாற்றங்கள்…! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!

மாதத்தின் தொடக்க நாள் என்பதால் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு உள்ளன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

KYC-யை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்:

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC-யை டிசம்பர் 12-ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும். ஒரு வேளை அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படலாம். ஏற்கனவே வங்கி தரப்பில் இருந்து பலமுறை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது இந்த முறை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே வகிக்க சென்ற நேரடியாகவும் அப்டேட் செய்யலாம், இதனை ஆன்லைனிலும் செய்து கொள்ளலாம்.

பணத்தை எடுக்க ஒரு முறை கடவுச்சொல் கட்டாயம்:

இன்று முதல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் டெபிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்க ஒரு முறை கடவுச்சொல் (OTP) வேண்டும். இயந்திரத்தில் கார்டைச் செருகிய பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவார்கள். OTP ஐ உள்ளிட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் ATM PIN ஐ உள்ளிட்டு மற்ற செயல்முறையை முடிக்க வேண்டும் என உங்களுக்கு அறிவுறுத்தும்.

ரயில் நேரங்களில் மாற்றம்:

பனிமூட்டம் மற்றும் குளிர் காலநிலை காரணமாக, ரயில்களின் நேர அட்டவணையில் ரயில்வே மாற்றம் செய்யக்கூடும். புதிய நேரம் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், 13,000 பயணிகள் ரயில்கள், 7,000 சரக்கு ரயில்களின் நேரத்தை ரயில்வே மாற்றியது. மேலும், நாடு முழுவதும் இயங்கும் 30 ராஜ்தானி ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம்:

ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் விலையினை பொறுத்து மாற்றம் இருக்கலாம். இது நேரடியாக சாமானியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வணிக ரீதியிலான சிலிண்டர் விலை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்குமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்: தமிழகத்திற்கு வரப்போகிறது புதிய பேருந்துகள் - அரசாணை வெளியீடு..

Thu Dec 1 , 2022
தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்காக புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது புதிய பஸ்கள் வாங்குவதற்கான அரசாணையையும் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் […]

You May Like