fbpx

இன்று முதல் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்தபடியே குப்பையை வீசினால் 8லட்சம் வரை அபராதம்…!

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அதன்படி வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் ஜூலை 1 முதல் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. குப்பை வீட்டிலிருந்து தான் வீசப்பட்டது என்பதை சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு முதலில் உறுதி செய்யவேண்டும்.

குழந்தைகள், வயதானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் குப்பை வீசினால் தேசியச் சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு இச்செய்கையை வேறு விதத்தில் கையாளும். அவர்களுக்கு விலக்கும் அளிக்கப்படும். வீட்டு உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குப்பை இவ்வாறு வீசப்பட்டபோது தாம் வீட்டில் இல்லை என்பதை நிரூபித்தால் சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு விதிக்கும் அபராதம் அல்லது தண்டனையை அவர் மறுக்கலாம். குப்பையை வீசியவரின் அடையாளத்தை சுற்றுப்புற அமைப்பிடம் 14 நாள்களுக்குள் தெரிவித்தும் அவர் தனது குற்றச்சாட்டை மறுக்கலாம்.

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு உயரத்திலிருந்து குப்பை வீசுபவர் யார் என்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முதல் முறை: $2,000(இந்திய கணக்குப்படி 1,64,080 ரூபாய்) வரையும், 2வது முறை: $4,000 (இந்திய கணக்குப்படி 3,28,385 ரூபாய்) வரையும், 3வது அல்லது அடுத்தடுத்த முறை: $10,000 (இந்திய கணக்குப்படி 8,20,962.50 ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படும். அதோடு, குற்றம் புரிந்தோருக்கு 12 மணி நேரம் வரை பொதுஇடத்தை சுத்தம் செய்யும் பணியும் தண்டனையாக விதிக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Kathir

Next Post

நாளை முதல் தீவிரமடையும் பருவமழை..!! தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை..!! எங்கெங்கு..? லிஸ்ட் உள்ளே..!!

Sat Jul 1 , 2023
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகத்திலும் மாறுபாடு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்துக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான […]

You May Like