fbpx

நாளை முதல் இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையா இருங்க..!! கிரகங்கள் மாறுவதால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?

நாளை அக்டோபர் 9ஆம் தேதி வியாழன் கிரகத்தின் பிற்போக்கு இயக்கம் நிகழ இருப்பதால், அதன் பாதிப்பு 12 ராசிகளிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. வியாழனின் பிற்போக்கு இயக்கம் அனைத்து ராசிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. இந்த நிகழ்வு கீழ்காணும் ராசிக்காரர்களை எப்படி பாதிக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம் :

துலாம் ராசிக்காரர்கள் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து, பணவாய்தாக்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். மன உளைச்சல் உண்டாகும். தியானம் மற்றும் யோகா போன்ற செயல்களின் மூலம் மன அமைதியைப் பெறலாம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் உருவாகலாம். பழைய நிகழ்வுகளால் மன அழுத்தங்கள் ஏற்படும். திடீர் பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணம், சொத்து விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஆரோக்கிய குறைபாடுகளால் விரயச் செலவும் ஏற்படலாம். இருப்பினும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே ஆரோக்கியம் மற்றும் பணியிடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். காரியத்தடை, காலதாமதத்தால் தொழிலில் நஷ்டம் உருவாகலாம். இதனால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அலுவலகத்தில் சகபணியாளர்களிடையே சலசலப்புகக்ள் இருந்தாலும் காலப்போக்கில் சீராகும். பகையை வளர்க்க தேவையில்லை. பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்க காலம் இன்னும் கனியவில்லை.

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் மோதல்கள் ஏற்படலாம். வியாழன் மந்தநிலையில் இருந்தாலும், குடும்பத்தில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கான நேரம் இது.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு சாதகமான காலகட்டம் இது. தொழிலில் மாற்றம் செய்ய விரும்பினால், அது வெற்றி அடையும். உறவுகளில் சச்சரவுகள், மனக்கசப்புக்கள் உருவாகலாம். இலக்குகளில் கவனம் செலுத்தி மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலன்களை பெறலாம்.

மீனம் :

மீன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணத்தில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் காலகட்டம் இது. பணியிடத்தில் நற்பெயர் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கையில் திடீர் சவால்களை பொறுமையுடன் எதிர்கொண்டால், சாதகமான பலன்களை பெறலாம்.

Read More : டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா..? ஆன்லைனில் மீண்டும் பெறுவது எப்படி..? வாகன ஓட்டிகளே தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

As the retrograde movement of Jupiter takes place on October 9th, its influence is going to cause huge changes in all 12 signs.

Chella

Next Post

Vastu Tips : இந்த ராசிக்காரர்கள் தவறுதலா கூட பூனையை வளர்க்காதீர்கள்.. பெரிய நஷ்டம் ஏற்படும்..!!

Tue Oct 8 , 2024
Since ancient times, humans have the habit of keeping animals, keeping these animals brings happiness in the mind, and helps in building a unique relationship with them.

You May Like