fbpx

வயநாடு இடைத் தேர்தல் முதல் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரை.. தற்போதைய அப்டேட் இதோ..

வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜார்கண்டில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு நவ.20ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வயநாடு இடைத்தேர்தல் : வயநாட்டில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவருக்குப் போட்டியாக மாநிலத்தை ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்யன் மொகேரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் களம் காண்கின்றனர். தொகுதியை தக்க வைத்துக்கொள்வது மட்டுமின்றி, பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட அதிகம் பெறுவாரா என்ற அழுத்தமும் அவர் மேல் இருந்து வருகிறது. வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், வயநாடு மக்கள் என்மீது காட்டிய அன்பை, நான் அவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் வகையிலும், அவர்களுக்காக பணியாற்றும் வகையில், அவர்களுடைய பிரதிநிதியாக இருக்கும் வகையில் எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

43 தொகுதி சட்டமன்ற தேர்தல் : ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாமில் தோலாய், பெஹாலி, சமகுரி, போங்கைகான் மற்றும் சிட்லி ஆகிய ஐந்து இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. பீகாரில் ராம்கர், தராரி, இமாம்கஞ்ச் மற்றும் பெலகஞ்ச் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதுபோல, கர்நாடகாவில் சன்னபட்னா,ஷிகாவ்ன் மற்றும் சந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் புத்னி மற்றும் விஜய்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் ஜுன்ஜுனு, தௌசா, தியோலி-உனியாரா, கின்வ்சார், சௌராசி, சலூம்பர் மற்றும் ராம்கர் ஆகிய இடங்களில் இன்று சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சலூம்பர் மற்றும் ராம்கர் தொகுதியில் அம்ரித்லால் மீனா (பாஜக) மற்றும் ஜுபைர் கான் (காங்கிரஸ்) ஆகிய இரு எம்எல்ஏக்களின் மறைவு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தல்தாங்ரா, சீதை (தனி தொகுதி), நைஹாத்தி, ஹரோவா, மேதினிபூர் மற்றும் மதரிஹாட் ஆகிய ஆறு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், மதரிஹாட் (பாஜக) தொகுதி தவிர மற்ற 5 தொகுதிகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 2021 வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more ; 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

English Summary

From Wayanad by-elections to Jharkhand assembly elections, here is the current situation.

Next Post

புரோ கபடி லீக் தொடர்..!! குஜராத் ஜெயன்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை..!!

Wed Nov 13 , 2024
Gujarat Giants vs Bengal Warriors will clash in the first match starting at 8 PM tonight.

You May Like