fbpx

பர்னிச்சர் கடை அதிபரின் பலான வேலைகள்..!! இரவு நேரத்தில் நிர்வாண வீடியோ கால்..!! பள்ளிக்கரணையில் பரபரப்பு..!!

கிராமப்புறங்களில் இருந்து இளம் பெண்களை வேலைக்கு வரவழைத்து அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்து மிரட்டி வந்த பள்ளிக்கரணை பர்னிச்சர் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குமரன் பர்னிச்சர் நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார். தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த இவர், தனது பர்னிச்சர் கடையில் விற்பனையாளர் வேலைக்கு என்று ஏழை குடும்பத்து இளம் பெண்களாக பார்த்து சேர்த்துள்ளார். அவர்களிடம் தனது பண செல்வாக்கை பயன்படுத்தி கடையில் வைத்தே அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அந்த பெண்களை மிரட்டி தினமும் இரவில் தங்கும் விடுதிக்கு சென்ற பின்னரும் வீடியோ காலில் தான் விரும்பும் வகையில் பேசச்சொல்லி தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பர்னிச்சர் கடை அதிபரின் பலான வேலைகள்..!! இரவு நேரத்தில் நிர்வாண வீடியோ கால்..!! பள்ளிக்கரணையில் பரபரப்பு..!!
கோப்புப் படம்

உதவிக்கு யாரும் இல்லாததால் அங்கு பணி புரிந்த பெண்கள் பயந்துபோய் இதனை வெளியில் சொல்ல இயலாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஒரு பெண் அருண்குமாரின் செல்போனில் தன்னுடன் பணிபுரியும் சில பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பெண் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வீடியோவில் இருக்கும் பெண்களை அழைத்து பணம் கொடுத்த அருண்குமார் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

பர்னிச்சர் கடை அதிபரின் பலான வேலைகள்..!! இரவு நேரத்தில் நிர்வாண வீடியோ கால்..!! பள்ளிக்கரணையில் பரபரப்பு..!!

ஒரு கட்டத்தில் தனது செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருக்கும் தகவலை வெளியிட்ட பெண்ணை காதல் வலையில் வீழ்த்த முயன்றுள்ளார் அருண்குமார். இதையடுத்து, அந்தப்பெண் அருண்குமார் தனக்கு கொடுத்த தொல்லைகள் குறித்தும் மற்ற பெண் ஊழியர்களின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்தும் வீடியோ ஆதாரங்களுடன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாரிடம், வீடியோவில் இருக்கும் பெண்களை தனக்கு சாதகமாக பேசுவதற்காக பர்னிச்சர் கடை உரிமையாளர் அருண்குமார் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணையில், அந்தப்பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை புகாராக சொன்னதால், அருண்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! பிரசவ வலியால் துடித்த தமிழ் பெண்..!! ஆதார் இல்லாததால் சிகிச்சைக்கு மறுத்த மருத்துவர்..!!

Fri Nov 4 , 2022
கர்நாடக மாநில அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாததால், வீட்டுக்கு சென்று இரட்டை குழந்தையை ஈன்றெடுத்த அவர், குழந்தைகளுடனே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த 30 வயது பெண் கஸ்தூரி. இவர் கர்நாடகா மாநிலம் துமகூருவில் உள்ள குடிசைப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த புதன்கிழமை இரவு பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மாவட்ட […]
பெரும் சோகம்..!! பிரசவ வழியால் துடித்த தமிழ் பெண்..!! ஆதார் இல்லாததால் சிகிச்சைக்கு மறுத்த மருத்துவர்..!!

You May Like