சென்னையில் பைக்கில் சென்றவர் மீது துணை நடிகர் பழனியப்பனின் கார் மோதியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் சரண்ராஜ் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக துணை நடிகர் பழனியப்பன் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சரண்ராஜ் மீது பழனியப்பனின் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது பழனியப்பனிடம் விசாரணை நடத்தியதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த சரண்ராஜின் உடலை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.