fbpx

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை..!! அரசாணை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசுப் பள்ளிகளில் வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இந்த அரசாணையில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை 37,588 ஆகும். இதில் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,06,985 ஆகும். இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும்.

50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களில் 1,06,985ல் மூன்றாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் 35,600 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த 35,600 ஆசிரியர்களுக்கும் கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 வீதம் ரூ.3.56 கோடி மட்டும் தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து விடுவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகையை தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அதிகாரம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு வழங்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

'சட்டசபைக்குள் சத்தமில்லாமல் பேச்சு.." மீண்டும் பாஜக பக்கம் சாய்கிறதா அதிமுக.? வானதி தங்கமணி உரையாடல்.! பிண்ணனி என்ன.?

Wed Feb 14 , 2024
தமிழக அரசியலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் ஆளுநரின் வெளிநடப்பிற்கு, எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூற மறுத்துவிட்டார். ஆளுநரின் வெளிநடப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு நான் எதிர்க்கட்சிக்காரன் என்ற பதிலை மட்டும் சொல்லிவிட்டு சென்றார் இதனால் அதிமுக மற்றும் பிஜேபி கட்சிகள் இடையே கூட்டணி அமைவது தொடர்பான சந்தேகங்கள் எழும்பியது. இந்நிலையில் […]

You May Like