ஜார்கண்ட் மாநிலம் குட்டா மாவட்ட பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு, முழு வளர்ச்சியடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் உடலினுள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பை மற்றும் அதன் குழாய் உட்பட பல்வேறு உறுப்புகள் உடலுக்குள் வளர்ந்தன. இதையறிந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி டாக்டர் தாரா சங்கர்ஜா கூறுகையில், கோடிக்கணக்கில் ஒருவருக்கு இது நடக்கும். அறுவை சிகிச்சையின் போது அவரது உடலில் இருந்து அனைத்து பெண் இனப்பெருக்க உறுப்புகளும் அகற்றப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.