fbpx

போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசம்..!! 19 இளைஞர்களுக்கு எச்ஐவி பாதிப்பு..!! மனைவிகளுக்கும் பரவிய சோகம்..!!

போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் நானிடால் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் எனும் பகுதியில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இங்குள்ள 17 வயது சிறுமி ஒருவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். சிறுமியுடன் பழகிய இளைஞர்கள் சிலர், போதை பொருள் வேண்டும் என்றால் தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். இப்படியாக 19 பேருக்கும் அதிகமான இளைஞர்களுடன் அந்த சிறுமி உடலுறவு வைத்துள்ளார்.

இந்த இளைஞர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், தீராத உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரியை பரிசோதித்தபோதுதான், இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

தொற்று யார் மூலம் பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மறுபுறம் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் சிலருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. ஆகையால், அவர்களது மனைவியருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திடம் பேசிய அப்பகுதி மருத்துவர்கள், “இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த ஆண்டு 45 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமி ஹெராயின் போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டவர்களுக்குத்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் நோய்வாய்ப்பட தொடங்கிய உடன் நாங்கள் உடனடியாக சோதனை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினோம். ஆனால், சோகம் என்னவெனில், சில இளைஞர்களுக்கு திருமணமாகி உள்ளது. அவர்களின் மனைவியும் கூட இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.

Read More : சென்னை மக்களே..!! இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்..!! மோசமான நிலைமை..!!

English Summary

HIV infection has come as a shock to 19 youths who were flirting with a drug-addicted girl.

Chella

Next Post

410 முறை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. இன்டர்போல் உதவியை நாடிய இந்தியா!

Fri Nov 1 , 2024
410 times bomb threat to planes!. India sought Interpol's help!

You May Like