fbpx

10ஆம் வகுப்பு மாணவனுடன் உல்லாசம்..!! பெண் குழந்தைக்கு தாயான 9ஆம் வகுப்பு மாணவி..!! தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், 9ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், வயிறு சற்று வீக்கமாக இருந்துள்ளது. இதை பெற்றொர் சரிவர கவனிக்காமல் விட்டுள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் சிறுமியை தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தையும் பிறந்தது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது சிறுமி கூறுகையில், ”10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் தன்னை காதலிப்பதாக கூறி, என்னிடம் முறைகேடாக நடந்து கொண்டான்” என கூறியுள்ளார். இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். இதில் சிறுவன், சிறுமியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 15 வயதாகும் அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Read More : சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?

English Summary

“A 10th grade boy said he loved me and misbehaved with me,” she said.

Chella

Next Post

கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்.. 10 ஆண்டுகளில் இத்தனை வழக்குப்பதிவா? - காவல்துறை வெளியிட்ட டேட்டா

Wed Nov 27 , 2024
In the last 10 years, cases have been registered against 231 college students in Chennai for vandalism, the police informed the Chennai High Court.

You May Like