fbpx

காதலனுடன் உல்லாசம்..!! திடீரென வந்த பழைய நியாபகம்..!! ஒரே ஒரு ஃபோன் கால்..!! மொத்தமும் குளோஸ்..!!

கொடைக்கானலில் காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த காதலி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி சக்தி நகரை சேர்ந்தவர் சூர்யா (30). சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்வேதா (25). இருவரும் சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் சூர்யா, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்வேதா, சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்து சூர்யாவுடன் தங்கி இருந்துள்ளார்.

காதலனுடன் உல்லாசம்..!! திடீரென வந்த பழைய நியாபகம்..!! ஒரே ஒரு ஃபோன் கால்..!! மொத்தமும் குளோஸ்..!!

நவ.30ஆம் தேதி இரவு இருவருக்கும் இடையே பழைய சம்பவங்களை நினைவுபடுத்தியதில் தகராறு ஏற்பட்டு சூர்யா, ஸ்வேதாவை தாக்கியுள்ளார். அப்போது ஸ்வேதா, தனது நண்பரான கொடைக்கானலில் உள்ள மதுரையை சேர்ந்த கௌதமை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். உடனே அவரும், தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு வந்தார். அங்கு சூர்யா காயங்களுடன் கீழே கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு கொடைக்கானல் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

காதலனுடன் உல்லாசம்..!! திடீரென வந்த பழைய நியாபகம்..!! ஒரே ஒரு ஃபோன் கால்..!! மொத்தமும் குளோஸ்..!!

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலி ஸ்வேதாவின் நண்பர் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (27), பராந்தக சோழன் (25), அகில் அகமது (25) ஆகிய 4 பேரும் சூர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை உருட்டுக்கட்டை மற்றும் கைகளால் தாக்கிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூர்யாவை கொன்றதாக ஸ்வேதா, கௌதம் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையான சூர்யா முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் உறவினர் என கூறப்படுகிறது.

Chella

Next Post

செம அறிவிப்பு..!! இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்..!! ஓய்வூதியமும் உயர்வு..!! முதலமைச்சர் அதிரடி..!!

Sat Dec 3 , 2022
மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினம் – 2022 விழாவில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான மாநில விருதுகளை வழங்கினார். இதையடுத்து, பேசிய அவர், ”அனைத்து நாட்களுமே மாற்றுத் திறனாளிகளுக்கு நன்மை செய்கிறோம். அனைவரையும் […]

You May Like