fbpx

காதலனுடன் உல்லாசம்..!! கர்ப்பமானதால் அதிர்ச்சி..!! கருவை கலைத்த +2 மாணவி மரணம்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பருத்திப்பள்ளியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. இவர், தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். மகள் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பில் இருந்து பள்ளிக்கு செல்வதை அந்த சிறுமி நிறுத்தியுள்ளார். வீட்டிலேயே இருந்த அந்த சிறுமிக்கும், புதுச்சத்திரம் நவனி பகுதியைச் சேர்ந்த செல்போன் கடை ஊழியர் செந்தில் என்பவரின் மகன் அரவிந்துக்கும் (வயது 23) இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி செய்வதறியாமல், வீட்டிற்கு தெரியாமல் கருவை கலைக்க திட்டமிட்டுள்ளார். கருவை கலைக்க மருந்துக்கடையில் மருந்து வாங்கி உட்கொண்டுள்ளார். இதனால் சிறுமிக்கு பிறப்புறுப்பில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த குடும்பத்தினர், உடனே மாணவியை மல்லசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் சிறுமியின் நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் காதலன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : நீங்க தினமும் போற சாலையில் இதை கவனிச்சிருக்கீங்களா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

The police have registered a case regarding the death of the student and arrested the student’s boyfriend Aravind and are investigating.

Chella

Next Post

’என் நீண்ட கால நண்பர்’..!! ’அவரது மறைவு எனக்கு மிக வருத்தம்’..!! நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்..!!

Fri Oct 11 , 2024
Actor Rajinikanth condoles death of Murasoli Selvam

You May Like