மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் மகள், மிரட்டலுக்கு பயந்து தனது காதலனுக்கு வீட்டிலிருந்து நகை, பணத்தை திருடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் தனியார் ஆங்கில வழி பள்ளியில் பயின்று வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பள்ளியின் முன் அமான் என்ற நபரை சந்தித்துள்ளார். நட்பாக பேசி, பின்னர் நெருக்கமாக பழகி வந்தனர். அப்படியே நாட்கள் செல்ல நபர் ஒரு நாள் நாக்பாடாவில் உள்ள ஒரு அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் உல்லாசமாக இருந்துவிட்டு, நிர்வாண படங்களை எடுத்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளார். அவனது மிரட்டலுக்கு பயந்து சிறுமி தனது வீட்டில் முதலில் ரூ.3 லட்சத்தையும், பின்னர் ரூ.2 லட்சத்தையும் திருடி அமானிடம் கொடுத்தார். அதற்கு பின்பும் மிரட்டல் தொடர நகைகளை திருடத் தொடங்கியுள்ளார். வீட்டில் இருந்த வைர மோதிரம், நெக்லஸ், வைர வளையல்கள், தங்க செயின், தங்க லாக்கெட் உள்ளிட்ட நகைகளை திருட ஆரம்பித்து, அமானிடம் ஒப்படைத்திருக்கிறார் அந்த சிறுமி. தங்களுடைய வீட்டிலிருந்து நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதை அடுத்து, ஏதோ தவறு நடந்ததாக குடும்பத்தினர் சந்தேகித்துள்ளனர்.

எனவே அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காவலர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தனியாக அழைத்து விசாரித்தபோது, சிறுமி தனது நிர்வாண படங்களை வைத்து அமான் மிரட்டுவதாகவும் பணம் தரவில்லை என்றால் தனது படங்களை இணையத்தில் பகிர்ந்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அவனுக்கு கொடுக்கவே திருடினேன் என்று ஒப்புக்கொண்டார். இதையடுத்து, தொழிலதிபர் மகளை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.