மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் நிதியை தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் விடுவிக்கிறது. அந்த வகையில், தற்போது மத்தியப்பிரதேச மாநில அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதி உதவியை விடுவித்துள்ளது. மொத்தம் ரூ. 355.34 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 35,580 பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 3 லட்சத்திற்கும் கீழ் வருமானம் இருப்பவர்கள் இணைந்து பயன்பெறலாம். இதற்காக அரசு தரப்பில் 3 தவணைகளாக ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்.
இந்நிலையில், இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற தற்போது எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முதலில் pmaymis.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று citizen assessment என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் பல விருப்பங்கள் காண்பிக்கும் நிலையில், நீங்கள் தங்குவதற்கு ஏற்ற விருப்பத்தை தேர்வு செய்து செக் என்பது கிளிக் செய்தால் ஒரு ஆன்லைன் படிவம் தோன்றும். இந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவலை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு திரையில் ஒரு விண்ணப்ப எண் தோன்றும். மேலும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.