fbpx

குட் நியூஸ்…! ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க கால அவகாசம் மேலும் நீட்டிப்பு…!

தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14, 2024 வரை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று UIDAI ஆரம்பத்தில் அறிவித்தது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடுவை செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு 3-வது முறையாகும். மக்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது மிகவும் முக்கியம், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் அட்டை வைத்திருப்பதால் பலரும் தங்கள் அட்டையை புதுப்பிக்கவில்லை.

இதனால் ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் இலவசமாகவே அப்டேட் செய்ய UIDAI சிறப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. செப்டம்பர் 14, 2024 வரை எந்த கட்டணமும் இல்லாமல் mAadhaar போர்ட்டலில் இதைச் செய்யலாம். அதாவது myAadhaar portal மூலமே நீங்கள் ஆன்லைனில் ஆதாரை புதுப்பித்து கொள்ள முடியும். கை ரேகை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு பயனர்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும்.

ஆதார் அட்டையின் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றை இலவசமாக மாற்றுவது எப்படி..?

முதலில் UIDAI-ன் https://myaadhaar.uidai.gov.in/ என்னும் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும். பின்னர் Document Update’ என்பதைத் தேர்ந்தெடுத்து தகவலை புதுப்பிக்க தேவையான ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களின் தற்போதைய விவரங்கள் திரையில் தோன்றும். அடுத்ததாக ஆதார் அட்டை விவரங்களைச் சரிபார்த்து, அடுத்த ஹைப்பர்-லிங்கில் கிளிக் செய்யவும். பின்னர் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணத்தைத் தேர்வு செய்யவும். இறுதியாக ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

English Summary

Extension of deadline for individuals to update their Aadhaar card details.

Vignesh

Next Post

பெரும் சோகம்!. ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து!. ராணுவ வீரர் பலி!. 4 பேர் காயம்!

Fri Jun 14 , 2024
Soldier killed, 4 others sustain injuries as Army vehicle falls into gorge in J-K's Rajouri

You May Like