fbpx

”விநாயகர் சிலைகள் இப்படித்தான் இருக்க வேண்டும்”..!! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டது மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த அனுமதியில்லை. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’பொறுப்பேற்றதில் இருந்து பிரதமர் மோடி இதுவரை ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை’..!! ஆர்டிஐ தகவல்

Mon Sep 4 , 2023
இந்திய பிரதமராக கடந்த 2014-இல் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. பிரஃபுல் பி சர்தா என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) இரண்டு கேள்விகள் கேட்டுள்ளார். அதாவரது மோடி பிரதமரானதில் இருந்து எத்தனை நாட்கள் பதவிக்கு வந்தார்? என்று கேட்டுள்ளார். அதற்கு ஆர்டிஐ, பிரதமர் எல்லா நேரத்திலும் கடமையில் இருக்கிறார். அவர் பதவியேற்றதில் […]

You May Like