fbpx

”விநாயகர் சிலையை விற்கக் கூடாது”..!! தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள்..!!

நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சில யோசனைகளுடன், “நெல்லை பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை” என்று உத்தரவிட்டார்.

மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது. சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கிவிட்டு சிலைகளை விற்கலாம். வீட்டில் வைத்து வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை நீதிபதி வழங்கினார்.

இந்நிலையில், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. விஷம் என்பதில் ஒரு துளி விஷம் அதிக விஷம் என்பது இல்லை, எல்லாமே விஷம்தான்; இவ்வகை சிலைகள் தயாரிக்கவும், விற்கவும் கூடாது என நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Chella

Next Post

நிஃபா வைரஸ் எதிரொலி..!! புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் மூடல்..!! தேர்வுகளும் ரத்து..? வெளியான அறிவிப்பு..!!

Sun Sep 17 , 2023
நிஃபா வைரஸ் எதிரொலியாக புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் மாஹே பிராந்தியம் கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாஹே பிராந்தியத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாஹேவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் வரும் 24ஆம் தேதி வரை மூட […]

You May Like