fbpx

கஞ்சா வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜராகாத சவுக்கு சங்கர்..!! பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி..!!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது, அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குறிப்பாக அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 6 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் போது சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகாதது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி செங்கமலச்செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Read More : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா..!! கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வாக்கெடுப்பு..!! ஆதரவு, எதிர்ப்பு எத்தனை பேர் தெரியுமா..?

English Summary

He issued an arrest warrant for Savukku Shankar and ordered a swift response. Following this, he adjourned the case to the 20th.

Chella

Next Post

ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது FIR பதிவு செய்யப்படும்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..

Tue Dec 17 , 2024
FIRs to be registered against those helping beggars from January 1

You May Like