அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் பிரைன் ஸ்பெஷர் (32). இவருக்கு ஓமெலியா (26) எனும் நண்பர் இருந்தார். பிரைன் ஸ்பெஷர், ஓமெலியாவின் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2018 மே 27ஆம் தேதி, இருவரும் இணைந்து, கஞ்சாவைப் புகைத்துள்ளனர். தொடர்ந்து, மறுநாள் வீட்டின் வாசல் வழியே ரத்தம் வழிந்திருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது, பிரைன் ஸ்பெஷர் கையில் கத்தியும், அவர் உடலில் சில கத்திக்குத்துக் காயங்களும் இருந்தன. அருகிலிருந்த ஓமெலியா சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. கொலை செய்யப்பட்ட ஒமெலியாவின் உடலில் சுமார் 108 கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பிரைன் ஸ்பெஷரை நீதிமன்றம் தற்போது விடுவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞர்கள், ”பிரைன் ஸ்பெஷர், தன் காதலனைக் கத்தியால் குத்தியபோது, கஞ்சாவால் தூண்டப்பட்ட மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய செயல்களில் அவருக்கே கட்டுப்பாடு இல்லை. அதனால்தான் அவரும் பலமுறை தன்னைத்தானே குத்திக்கொண்டார். எனவே, இது மனநோயாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். எனவே, தற்போது நன்னடத்தை காரணமாக, 100 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் சிறை விடுவிக்கப்பட்டுள்ளார்” என்றனர்.