fbpx

Garlic Price | இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! பூண்டு விலை அதிரடியாக குறைந்தது..!! இனி கவலை இல்லை..!!

தமிழ்நாட்டில் பூண்டு விலை அதிரடியாக குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Garlic Price | தமிழ்நாட்டில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில், வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக பூண்டு விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழ்நாடு, கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பூண்டுகள் வரத்து தற்போது, அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர்.

Read More : https://1newsnation.com/omni-bus-only-those-3-stops-petition-of-omni-bus-owners-dismissed/

Chella

Next Post

பிரபல யூடியூபர் ஏற்பாடு செய்த பார்ட்டியில், பாம்பு விஷம்.! 5 பேர் கைது.!

Mon Feb 19 , 2024
டெல்லியில் பிரபல யூடியூபர் ஏற்பாடு செய்த பார்ட்டியில், பாம்புகள் மற்றும் அதன் விஷத்தை விநியோகித்ததாக பரபரப்பு புகார் நொய்டா காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது. காவல்துறைக்கு கிடைத்த மாதிரிகளில், பாம்பின் விஷம் இருப்பதை, ஜெய்ப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளதை அடுத்து, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ், தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை எடுப்பதற்காக பாம்புகளை பயன்படுத்தி வந்துள்ளார். டெல்லி […]

You May Like