fbpx

ஒரே ஆண்டில் 2 மடங்காக அதிகரித்த கெளதம் அதானியின் சொத்து மதிப்பு.. ஒரு நாள் வருமானம் எவ்வளவு..?

ஒரு நாளைக்கு சுமார் 1612 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதன் மூலம் ஒரே ஆண்டில் தனது சொத்து மதிப்பை கெளதம் அதானி இரட்டிப்பு ஆக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி சமீபத்தில் உலகப்பணக்காரர் பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறினார்.. இது ப்ளூம்பெர்க் பட்டியலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு சொந்தமான பங்குகளின் விலை அதிகரித்ததால் அவரின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி கடந்த வாரம் உலக அளவில் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை அதானி எட்டி இருந்தார்.

இந்நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 1612 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதன் மூலம் ஒரே ஆண்டில் தனது சொத்து மதிப்பை கெளதம் அதானி இரட்டிப்பு ஆக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹுரூன் இந்தியா’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இது தெரியவந்துள்ளது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சொத்து மதிப்பில் முகேஷ் அம்பானியை காட்டிலும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக பெற்று அதானி முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனியின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு சுமார் 10.94 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது..

கடந்த ஏப்ரல் மாதம் அவர் 100 பில்லியன் டாலர் செல்வந்தர்களுக்கான கிளப்பில் இணைந்திருந்தார். அதே போல அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 15.4 முறை என்ற கணக்கில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அம்பானி 7.94 லட்சம் கோடி ரூபாயை தனது சொத்து மதிப்பாக வைத்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய செல்வந்தர்களில் முதலிடத்தில் அம்பானி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிமையங்கள் தொடர்பான விதிகளில் திருத்தம்....!

Thu Sep 22 , 2022
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செப்டம்பர் 20-ம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது, ​​இந்த அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினரால் சில விஷயங்கள் அடையாளம் காணப்பட்டன.புதிய விதிகள் பின்வரும் முக்கிய அம்சங்களுடன் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் செயல்பாட்டை மேலும் நெறிப்படுத்தும். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.இரு சக்கர […]

You May Like