fbpx

Gautam Gambhir | ’எனக்கு அரசியலே வேண்டாம்’..!! பாஜகவில் இருந்து திடீரென விலகும் கௌதம் கம்பீர்..!!

கிரிக்கெட் தொடர்பான பணிகள் இருப்பதால் தன்னை கட்சியில் இருந்து விடுவிக்குமாறு பாஜக மாநில தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பாஜக எம்.பி-யான கௌதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கௌதம் கம்பீர் திடீர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, தன்னுடைய வருங்கால கிரிக்கெட் பணிகள் காரணமாக அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், மக்களுக்கு சேவையாற்ற வழங்கிய வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். கௌதம் கம்பீரின் இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, கௌதம் கம்பீரின் முடிவு குறித்து பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட கம்பீர் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்புக் கிடைக்காது என்று தெரிந்ததால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதலமைச்சராக உள்ள மேற்குவங்க மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருந்து வருகிறது. நடிகர் ஷாருக்கானுக்குச் சொந்தமான இந்த அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மம்தாவுக்கு ஆதரவாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Read More : Lok Sabha | ”84 வயதுக்குட்பட்டோர் தபால் வாக்களிக்க முடியாது”..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

Chella

Next Post

Lok Sabha | ’உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.ம.க’..!! ஜவாஹிருல்லா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Sat Mar 2 , 2024
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரவர்களின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள மனிதநேய மக்கள் […]

You May Like