fbpx

Exam: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வு…!

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடப்பாண்டு 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கவுள்ளது.

முதலில் அரியர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 6 முதல் 13-ம் தேதிக்குள் திருத்தி முடிக்கப்படும். பின்னர் மற்ற விடைத்தாள்கள் திருத்தப்படும். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14-ல் வெளியிடப்படும்.

10-ம் வகுப்பு தேர்வு

நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. முதலில் மொழி பாடமான தமிழ் தேர்வு நடைபெற உள்ளது. பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ, தனியார் பள்ளிகளின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களையோ முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது.

மேலும் தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நைட் டைம்ல Mobile பாக்குறீங்களா?… நிரந்தர தூக்கத்தை தொலைக்கும் ஆபத்து!… ஆய்வில் அதிர்ச்சி!

Mon Mar 25 , 2024
Mobile: இரவு தூக்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் நிரந்தரமாக தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்க மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் கண் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எல்லோரிடமும் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறி விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலைப்பேசி தொலைக்காட்சி கணினிகளில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர்.இது போன்ற திரைகளுக்கு அடிமையாகுவதால் […]

You May Like