fbpx

GIC Recruitment 2024 : மத்திய அரசில் வேலை.. ரூ.50 ஆயிரம் முதல் சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா?

ஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (General Insurance Corporation of India) சார்பில் உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று (டிச.4) தொடங்கிய விண்ணப்பப் பதிவின் மூலம், இதில் 110 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..

தேர்வு முறை எப்படி?

  • எழுத்துத் தேர்வு
  • குழு விவாதம்
  • நேர்காணல்
  • மருத்துவத் தேர்வு

ஊதியம் : தேர்வு செய்யப்படுவோர் உதவி மேலாளர் (Assistant Manager -Scale I Officers) ஆக பணி அமர்த்தப்படுவர். இவர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும்.

கல்வித் தகுதி என்ன?

* எந்தத் துறையாக இருந்தாலும் பட்டப் படிப்பு அல்லது முதுகலைப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களப் பெற்றிருக்க வேண்டும்.

* எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

* நவம்பர் 1, 2024-ன் படி, தேர்வர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? (Steps to apply for GIC Assistant Manager 2024 position)

Step 1 : gicre.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.

Step 2 : முகப்புப் பக்கத்தில், ‘Careers’ என்ற தலைப்பை தேர்வு செய்யவும்.

Step 3 : GIC Assistant Manager Recruitment 2024 இணைப்பை எடுத்துக் கொள்ளவும்.

Step 4 : முன்பதிவை முடித்து லாகின் செய்யவும்.

Step 5 : விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவும்.

Step 6 : பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Read more ; மாதவிடாய் கால ஒற்றைத் தலைவலி.. என்ன காரணம்..? எப்படி சரி செய்வது..?

English Summary

General Insurance Corporation of India (GIC) has announced the recruitment of Assistant Managers

Next Post

மீண்டும் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட வரும் கனமழை..!! இந்த தேதிகளில் சம்பவம் இருக்கு..!!

Fri Dec 6 , 2024
On December 11, heavy rain is likely to occur at one or two places in Mayiladuthurai, Nagapattinam, Thiruvarur, Thanjavur, Pudukkottai and Ramanathapuram districts, and Karaikal region.

You May Like