தனியார் வேலைகள் எப்போது வரும், எப்போது மறையும் என்று தெரியாது. நமக்கு பிடிக்காவிட்டாலும், கம்பெனி பிடிக்காவிட்டாலும், வேலை பறிபோவது நமக்குத்தான். இது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் தெரியும். ஆனால் சில நிறுவனங்களில் விதிகள் மற்றும் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை. அவை பின்பற்றப்பட வேண்டும். அப்படி இல்லை, யாரேனும் எல்லை மீறினால் தண்டிக்கப்படுவார்கள். அப்படி ஒரு எதிர்பாராத அனுபவம் தான் இளம்ப்பெண்ணுக்கு ஏற்பட்டது.
அந்த பெண் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று நிறுவனம் வேலையில் இருந்து நிறுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தை அணுகி அங்கு நீதி பெற்றார். அவர் காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டறிந்த வேலைவாய்ப்பு தீர்ப்பாயம், இளம் பெண்ணுக்கு இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
2022-ஆம் ஆண்டில் மேக்சிமஸ் யுகே சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த எலிசபெத் பெனாசி, தான் அணியும் காலனிகள் குறித்து கிண்டலுக்கு உள்ளானதாகவும், தன்னை அங்கு உள்ளவர்கள் குழந்தை போல நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார். அவருக்கு வயது 18. தனது ஸ்லிப்பர்கள் குறித்த அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளான எலிசபத்தை மேலாளரும் விமர்சித்ததை எடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான பார்வெல் எலிசபெத் பேசினா நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக கூறினார். மேலும் அவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் என்பதால் ஆடை கட்டுப்பாடு குறித்து அவர் அறிந்திருக்கவில்லை என்பதையும் கூறி நிறுவனத்திடம் ரூ.32 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.
Read more ; BIG BOSS Tamil : இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இல்ல.. ஒன்றுதான்..! அதுவும் இந்த நபரா? செம ட்விஸ்ட்