German Open Badminton: ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் சீனாவை வீழ்த்தி இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனியில், ‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற ஜெர்மன் ஓபன் பேட்மிண்டர் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஜப்பானின் அசுகா டகாஹஷி மோதினர். உன்னதி 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தஸ்னிம் மிர், சீனதைபேயின் டங் சியோ-டோங் மோதினர். இதில் அசத்திய தஸ்னிம் மிர் 21-17, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடியுடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.