fbpx

கோடைக்கால செரிமான பிரச்சனைகளை போக்க!… இதையெல்லாம் செய்யுங்கள்!

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் உங்கள் செரிமான அமைப்பு மற்றும் இரைப்பைக் குழாயை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தால் வயிற்றுக் கோளாறுகள், நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.எனவே, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க, ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது உங்களது உடலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம்.

உச்சி வெயில் அடிக்கையில் நாம் வெளியே செல்லும்பொழுது, நம் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து விடும். நம் நீரேற்றமாக இருக்க தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்ற நீர் சார்ந்த பானங்களை அருந்துவது கட்டாயமாகும். அதிகப்படியான வியர்வை காரணமாக, உடல் நிறைய தண்ணீரை இழந்து விடும். எனவே அதை நிரப்ப தினமும் 10-15 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம். குறிப்பாக, எவ்வளவு தான் தண்ணீர் எடுத்துக்கொண்டாலும் உடலுக்கு கேடு இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும், தயிர் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட மோர் போன்ற பானங்கள் உடலை குளிர்விப்பதோடு கோடை வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

ஒவ்வொரு உணவு வகையும் அதன் அளவும் செரிமான செயல்முறைக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோடைக் காலத்தில், உணவை இலகுவாகச் சாப்பிடுவது செரிமானம் ஆக்குவதற்கு எளிதாக இருக்கும். எளிதில் ஜீரணிக்க முடியாத மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும் எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது.பெருஞ்சீரகம் தண்ணீரை குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். உண்மையில், இந்த தண்ணீரை குடிப்பதால் வயிற்றை சுத்தப்படுத்துகிறது. செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது.

ஆறிப்போன காபி, எனர்ஜி பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் சோடா போன்ற குளிர் பானங்களில் அதிக அளவு சர்க்கரை உண்டு. இது கோடை மாதங்களின் வெப்பத்திற்கு உகந்ததல்ல. இது தவிர, வயிற்றின் வெப்பத்தையும் தணிக்கிறது, மேலும் இது பாதங்களில் ஏற்படும் எரிச்சலையும், முகப்பரு போன்ற பிரச்சனைகளிலிருந்து இருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது.

Kokila

Next Post

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு மாயாவதி ஆதரவு...! எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்..!

Fri May 26 , 2023
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பகுஜன் சமாஜ் கட்சி என் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு […]

You May Like