fbpx

கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வையுங்கள்!… இல்லையென்றால் 2 காதுகளும் கேட்காது!… அலட்சியம் வேண்டாம்!

அதிக கொலஸ்ட்ரால் காரணமாக படிப்படியாக காது கேளாமை ஏற்படுகிறது. இது இரண்டு காதுகளையும் சமமாக பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால் ஏற்படக்கூடிய காது கேளாமை பிரச்சனை பொதுவாக உரத்த ஒலி அல்லது இரைச்சல் மிகுந்த சூழலில் காது கேட்பதில் சிக்கல் ஏற்படுவதில் இருந்து துவங்குகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் நிரந்தரமாக காது கேட்காமல் போக வாய்ப்புள்ளது. கொலஸ்ட்ரால் நமது தமனிகளில் படிப்படியாக படிவதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால் கேட்கும் திறனை பாதிக்கிறது. தமனிகளை சுருங்க செய்து காதுகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. உட்புற காதுகளுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைபடும் பொழுது காது கேளாமை ஏற்படுகிறது. உங்களுக்கு காது கேட்பதில் சிக்கல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். ஒருவேளை உங்களின் இந்த காது கேளாமை பிரச்சனைக்கு அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இருந்தால் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகளை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள் : கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் தன்மை, நாம் சாப்பிடும் உணவுகளுக்கு உண்டு. கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு நாம் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கேக், பிஸ்கட், சாசேஜ்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சி போன்றவை அடங்கும். அது மட்டுமல்லாமல் தேங்காய் எண்ணெய் அல்லது பாமாயில் போன்ற எண்ணெய்களையும் ஒருவர் தவிர்க்க வேண்டும். பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் நெய், வெண்ணெய், கிரீம், சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விடவும்.

Kokila

Next Post

தாய்ப்பால் சுரக்கவில்லையா?… மன அழுத்தம் ஏற்படுகிறதா?… இதுதான் காரணம்!

Mon Sep 4 , 2023
பிரசவத்திற்கு பிறகு ஏற்படுகின்ற அசதி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை காரணமாக மன அழுத்தம் உண்டாகும். புதிய தாய்மார்கள் அன்றாட வாழ்க்கை பணிகளை சௌகரியமாக மேற்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட முடியாது மற்றும் முறையான தூக்கம் இருக்காது. இதன் காரணமாகவும் மன அழுத்தம் உண்டாகலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு அவர்களது கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதுமான ஆதரவு மற்றும் உதவி ஆகியவை கிடைக்க வேண்டும். இவை […]

You May Like