fbpx

12-ம் வகுப்பில் 546 மதிப்பெண்கள் எடுத்தும் கூலி வேலைக்கு செல்லும் நிலை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளிதான், வேல்முருகன் என்பவர். இவரது மகள் நந்தினி. அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நந்தினி, 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் நந்தினிக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. பெற்றோருக்கும் கல்வி விழிப்புணர்வு இல்லாததால் கல்லூரிக்கு விண்ணப்பிப்பது தாமதமானது.

இறுதி கட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்ததால் மதுரை அரசு மீனாட்சி கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் கல்லூரி கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தும்போது, இணையதள கோளாறால் கட்டணம் செலுத்த முடியாமல் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால், அரசு கல்லூரியில் சேரும் வாய்ப்பு பறிபோனதால், மாணவி நந்தினி வேதனை அடைந்துள்ளார். இந்நிலையால், எதிர்காலத்தில் முதல்நிலை பட்டதாரியாக ஆகியிருக்க வேண்டிய மாணவி நந்தினி, இப்போது கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார். மாணவியின் எதிர்கால கனவு என்ன என்பதுபற்றி அவர் கூறுவதை, இந்த வீடியோவில் பார்க்கலாம்..

Maha

Next Post

ஆசிய கோப்பைக்கு முன்பாகவே களம்காண்கிறாரா பும்ரா??

Mon Jun 19 , 2023
காயங்களால் அவதிப்படும் இந்திய வீரர்கள் என்ற பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வரிசையில் ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் என்ற சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய அணியின் முக்கியவீரர்களாக பார்க்கப்படும் இவர்கள் அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாகவே இருந்துவருகிறது. அடுத்தடுத்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை தொடர் என முக்கியமான தொடர்கள் வரவிருக்கும் நிலையில், முக்கியமான வீரர்கள் அணிக்குள் இருக்க வேண்டியது கட்டாயமாக இருந்துவருகிறது. உலகக்கோப்பை தொடரில் […]
மீண்டும் அணிக்கு திரும்பும் பும்ரா..!! மீண்டெழுமா இந்திய அணி..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

You May Like