fbpx

ராட்சத ராட்டினம்..!! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி..!! 60 அடி உயரத்தில் தொங்கிய 13 வயது சிறுமி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி நிகாசன் பகுதியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் 13 வயது சிறுமி 60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் தொங்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பதைபதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்ப்போரின் இதயங்கள் சில நிமிடங்கள் நின்று விடுவது போல் உணர முடிகிறது.

இந்த சம்பவம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றுள்ளது. லக்னோவில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள லக்கிம்பூர் கெரியின் நிகாசன் பகுதியில் உள்ள ராகேத்தி என்ற கிராமத்தில் தான் இந்த கண்காட்சி நடைபெற்றது. இதில், 60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் அமர்ந்திருந்த 13 வயது சிறுமி, சக்கரம் நகர தொடங்கியதும் சமநிலையை இழந்து ராட்டினத்தின் இரும்பு கம்பியில் தொங்கியபடி கூச்சலிட்டார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கூக்குரலிட்ட நிலையில், ஆபரேட்டர்கள் ராட்டினத்தை நிறுத்தினர். ஒரு நிமிடம் வரை அச்சிறுமி 60 அடி அந்தரத்தில் தொங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ராட்சத ராட்டினத்தை இயக்க அனுமதி இல்லாத போது எப்படி இயக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Read More : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்ட அறிவிப்பு..!!

English Summary

The girl was hanging 60 feet above the ground for a minute. The district administration has said that the girl is safe after a video of the incident went viral.

Chella

Next Post

வீடு முழுவதும் ரத்தக்கறை..!! 2-வது திருமணத்திற்கு பெண் தேடிய கணவர்..!! இந்திய வம்சாவளி இளைஞர் செய்த செயலை பாருங்க..!!

Fri Dec 6 , 2024
It is suspected that Naresh may have murdered Mamta and dismembered her body.

You May Like