fbpx

புதுமண தம்பதிகளுக்கு கிஃப்ட் பேக்..! அரசின் அதிரடி முடிவு..! அதில் என்ன இருக்கும் தெரியுமா?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதுமண தம்பதிகளுக்கு திருமண கிஃப்ட் பேக் ஒன்றை பரிசாகக் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், விரைவில் சீன மக்கள் தொகையை இந்தியா முந்திவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநில அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதுமண தம்பதிகளுக்கு திருமண கிஃப்ட் பேக் ஒன்றை பரிசாகக் கொடுக்க முடிவு செய்துள்ளது. அதில், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான புத்தகம், காண்டம், கருத்தடை மாத்திரைகள், திருமணப் பதிவு சான்று உள்ளிட்டவைகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இது தவிர மணப்பெண்ணுக்குத் தேவையான சீப்பு, கண்ணாடி, நகம் வெட்டும் கருவி, கர்ச்சீப், டவல், வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்துகொள்ளும் சாதனமும் கிஃப்ட் பேக்கில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

புதுமண தம்பதிகளுக்கு கிஃப்ட் பேக்..! அரசின் அதிரடி முடிவு..! அதில் என்ன இருக்கும் தெரியுமா?

இந்தத் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேசிய சுகாதார திட்ட இயக்குநர் சாலினி பண்டிட், ”ஒடிசாவில் குழந்தை பிறப்பு விகிதம் தேசிய அளவை ஒப்பிடுகையில் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனாலும், குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசு பேக்கை புதுமண தம்பதியிடம் கொண்டு சேர்க்க சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக திருமணம் செய்து கொள்பவர்களின் வீட்டிற்கே சென்று இந்த திருமண பரிசு பேக்கை கொடுக்க இருக்கிறோம். செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. இதை தம்பதியினர் சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியுள்ள தம்பதிக்கு கருத்தடை ஊசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

அரசுப் பேருந்தில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமை..! இரவில் அத்துமீறிய ஓட்டுநர்..!

Sun Aug 14 , 2022
தம்ழிநாடு அரசு விரைவுப் பேருந்தில் பயணித்த மாணவிக்கு, இரவில் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். தொடர் விடுமுறை காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவி, தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி, நேற்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தஞ்சாவூரில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் தமிழ்நாடு […]

You May Like