fbpx

உடலுக்கு அலர்ட் செய்யும் இஞ்சி!… எப்படி? எதற்காக தெரியுமா? ஆய்வின் விவரம் உள்ளே!

உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை இஞ்சி அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. முழுவிவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உணவின் சுவையை அதிகரிப்பதோடு, அபரிமிதமான மருத்துவ குணங்களைம் இஞ்சி உள்ளடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நம்மை காக்கிறது உடலை உள்ளே இருந்து வெப்பமாக்கி நன்மை பயக்கும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மேலும் இதயத்தை தீவிர நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இஞ்சியின் ஆண்டு இறக்குமதி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயம், ஜெர்மனியின் லேப்னிட்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் இஞ்சி பற்றிய சமீபத்திய ஆய்வில், இஞ்சி டீ குடித்த அரை மணி நேரத்திற்குள், அதன் கலவைகள் இரத்தத்தில் சேரும் என்று தெரியவந்துள்ளது. அவை இரத்தத்தை அடைவதன் மூலம் வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் காணப்படுவதால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இது இரத்த லிப்பிட்களை குறைப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.இஞ்சியில் உள்ள செல்களைப் பாதுகாக்கும் பண்புகள் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. செல்லுலார் செயல்பாட்டை குறைக்கிறது. இது குறித்து இன்னும் நிறைய ஆய்வுகள் செய்து, மேலும் விபரங்களை பெற வேண்டியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில், உணவு முறை உயிரியலுக்கான லீப்னிஸ் மையம் நடத்திய ஆய்வில், இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஒரு சிறிய அளவு இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளது. உடல் எடையை குறைக்க இஞ்சி சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.

Kokila

Next Post

விமான நிலையங்கள் இல்லாமல் இத்தனை நாடுகள் உள்ளதா!... இதுதான் காரணமாம்!... அறிந்துகொள்வோமா?

Sat Feb 25 , 2023
நிலப்பரப்பு மற்றும் புவியியல் அமைப்பு ஆகியவை காரணமாக உலகில் விமானநிலையங்களே இல்லாமல் பல்வேறு நாடுகள் உள்ளன. இதுகுறித்தான பட்டியல் அடங்கிய தொகுப்பை பார்க்கலாம். நவீன காலத்தில் விமான சேவை என்பது உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் மிகவும் இன்றியமைதாக சேவையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் பொதுவாக சிறிய மற்றும் பெரிய நகரங்களில் கூட விமான சேவை அவசியமானதாக உள்ளது. இப்படி இருக்கையில், விமான நிலையங்களே இல்லாமல் சில நாடுகள் உள்ளன. அதுகுறித்தான […]

You May Like