கடலூர் மாவட்டம் அரிசி பெரியாங்குப்பத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் ரகுவரனுக்கும், புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் வருகிற 10ஆம் தேதி திருமணம் நடைபெற்ற இருந்தது. இந்நிலையில், இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்களை கொடுத்து திருமணத்திற்கான வேலைகளில் மும்முரமாக செய்து கொண்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் இறந்துவிட்டார். இதனால், ரகுவரன் தனது தாயுடன் சேர்ந்து திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருமண செலவுக்கு போதிய பணம் இல்லாததால் தனக்கு தெரிந்தவர்களிடம் ரகுவரன் கடன் கேட்டுள்ளார். ஆனால், யாரும் கடன் கொடுக்கவில்லை முன்வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரகுவரன், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ரகுவரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.