காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பூஜா – லோகேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். பூஜா லோகேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காதலன் லோகேஷ், காதலியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து, காட்டுப் பகுதியில் சாலையோரம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பூஜா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பூஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், காதலன் லோகேஷ் மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் லோகேஷை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.