fbpx

சென்னையில் நடந்த கொடூர சம்பவம்…! கை, கால்களை அறுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து காதலி கொலை…!

தாம்பரத்தில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர். காதலிக்க மறுத்ததால் திட்டம் போட்டு கை, கால்களை அறுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், காதலை நந்தினி கைவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த 28 வயது இளம்பெண் நந்தினி கேளம்பாக்கம் அருகே சங்கிலியால் கட்டி கை, கால்களை அறுத்து எரித்து விமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பெண்ணின் பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி, கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுவிட்டு இரவு கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். கைதான வெற்றியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

ஜனவரி 2-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை...!

Sun Dec 24 , 2023
ரூ.951 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி விமானநிலைய புதிய முனைய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனைத் திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். தமிழகத்தில் சென்னையை அடுத்து திருச்சி விமான நிலையம் மிக முக்கியமானதாக விளங்குகிறது. எனினும் தற்போதுள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரே நேரத்தில் 440 பயணிகளைக் கையாளும் வகையில் 11,777 சதுர மீட்டரில் மட்டுமே அமைந்துள்ளது. எதிர்காலத்தில் திருச்சி விமான நிலையம் பெருமளவில் வளர்ச்சி […]

You May Like