fbpx

பல ஆண்களுடன் அரட்டை அடித்த காதலி..!! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கழுத்தை அறுத்த காதலன்..!!

மற்ற ஆண்களுடன் அரட்டையடித்ததால் காதலியை கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் வசித்து வரும் கனகபுரத்தைச் சேர்ந்த நவ்யா என்பவர் காவல்துறையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் (ஐஎஸ்டி) எழுத்தராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும், பிரசாந்த் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று நவ்யா தனது பிறந்த நாளை காதலன் பிரசாந்துடன் கொண்டாடியுள்ளார். அப்போது தனது காதலி பிறந்தநாள் கேக்கை வெட்டிய உடனேயே காதலியின் கழுத்தை பிரசாந்த் கொடூரமாக அறுத்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் அங்கு கிடைத்த நவ்யா விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்து ராஜகோபால் நகர் போலீஸ் விசாரணை நடத்தினர். “விசாரணையின் போது, நவ்யா மற்ற ஆண்களுடன் அரட்டையடித்ததால் அவளைக் கொன்றதாக பிரசாந்த் கூறினார். இருவரும் சமீப காலங்களில் இந்த பிரச்சனைக்காக பலமுறை சண்டையிட்டுள்ளனர்” என்றும் கூறியுள்ளார். காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இந்த நிதி யாருடையது..? பதில் அளிப்பீர்களா ஸ்டாலின்..? அண்ணாமலை போட்ட ட்வீட்..

Sat Apr 15 , 2023
தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ரஃபேல் வாட்சின் பில்லை தர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி, ரஃபேல் கடிகாரத்தின் ரசீதுடன், தனது சொத்து மதிப்புடன் வெளியிடப்படும் என்றும், தமிழ்நாடு […]

You May Like