காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக டெல்லியின் பல பகுதிகளில் உடல் பாகங்களை வீசியதாக கைதான அஃப்தாப் மேலும் சில தகவல்களை போலீசிடம் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரது காதலர் அஃப்தாப் கைது செய்யப்பட்டதை அடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஷ்ரத்தாவை சந்தித்து கதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் டெல்லிக்கு சென்றுவிடலாம் என முடிவுசெய்து டெல்லிக்கு வந்துள்ளனர். இருவரும் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தநிலையில் இவர்களுக்குள் திருமண பேச்சை எடுத்தாலே ஷ்ரத்தாவை தாக்குவது, சண்டையிடுவது என வாடிக்கையாக கொண்டிருந்திருக்கின்றார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான சண்டை வலுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்தபின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் இதற்காகவே பிரத்யேகமான ஒரு குளிர்சாதன பெட்டியை அவர் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதில் 35 துண்டுகளாக உடலை கூறுபோட்டு குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து வைத்துவிட்டார்.
இந்நிலையில் மற்றொரு பெண்ணுடன் காதல் உதயமாகி உள்ளது. அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் உடலை அந்த பெண் பார்த்துவிட்டால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என நினைத்த அஃப்தாப் உடலை கபோர்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். புதிய காதலியுடன் கட்டிலில் உல்லாசமாக இருந்த அதே நேரத்தில் பழைய காதலி கூறுபோடப்பட்ட பிணமாய் கபோர்டில் கிடந்துள்ளார்.
போலீசார், மெஹ்ரோலி வனப்பகுதியில் உடலை எங்கே வீசினாய் என விசாரித்தனர். ஒவ்வொருநாளும் 2 மணிக்கு இரண்டு இரண்டு பாகங்களாக பாலித்தீன் பையில் கொண்டு சென்று வீசியதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் விசாரணையில் அஃப்தாப் தெரிவித்துள்ளான். இது மட்டும் இன்றி ஷ்ரத்தாவின் உடலை கூறு போட்டு வைத்திருந்த அதே குளிர்சாதனப் பெட்டியில்தான் அஃப்தாப் தனது உணவுப் பொருட்களையும் குடிநீர் பாட்டிலையும் வைத்துள்ளான்.
சமூக வலைத்தலங்களில் பிசியாக இருந்து வந்த ஷ்ரத்தா தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்த அந்த அக்கவுண்டை பயன்படுத்தி சில நாட்களுக்கு பதிவுகளை ஷேர் செய்து வந்துள்ளார். ஷ்ரத்தா உயிருடன் உள்ளார் என்பதை இதன் மூலம் மறைக்கலாம் என அவர் நினைத்துள்ளார்.