fbpx

பெண்களே உஷார்!…. நெயில் பாலிஷ் பயன்படுத்தினால் உறுப்புகள் பாதிக்கும்!…. ஆய்வில் அதிர்ச்சி!

நெயில் பாலிஷ், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்கள் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களாகிய நாம் எல்லோரும் அழகாக இருக்கவே விரும்புகிறோம். அழகு தன்னம்பிக்கையை அளிக்க கூடியதும் கூட. அழகு சாதனப்பொருட்கள் இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலினரும் பயன்படுத்தும் அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. நாம் பல்துலக்க, குளிக்க, வாசனை உண்டாக்க பற்பசை, சோப், ஷாம்பு, பாடி ஸ்பிரே ஆகியவற்றை உபயோகிக்கின்றோம். நம்முடைய அழகினைக் கூட்ட நம்முடைய அன்றாட வாழ்வில் பல்வேறு அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறோம்.

அழகுசாதனப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தெரியாமல், நம்மிடையே, அதனுடைய‌ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களால், உடல்நலத்துக்கு பல்வேறு தீங்கு ஏற்படுகிறது. அந்தவகையில், பெண்கள் நகத்திற்கு பயன்படுத்தும் நெயில் பாலிஷ், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்கள் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே போல ஹேர் ஸ்ப்ரே, ஆஃப்டர் ஷேவ் உள்ளிட்ட தயாரிப்புகளில் காணப்படும் நச்சு ரசாயனங்கள் (toxic chemical) சருமத்தில் ஊடுருவி கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் Endocrine Society-யின் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி & மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த பொருட்களில் காணப்படும் என்டோகிரைன்-டிஸ்ரப்டிங் கெமிக்கல்ஸினால்(EDCs) பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Phthalates என்பது பர்சனல் கேர் ப்ராடக்ட்ஸ், குழந்தைகளுக்கான டாய்ஸ் மற்றும் ஃபுட் & பிவரேஜ் பேக்கேஜிங் போன்ற பிளாஸ்டிக்கில் பரவலாக பயன்படுத்தப்படும் கெமிக்கல்ஸ் ஆகும். Phthalates கலக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் கருவுறும் விகிதத்தில் சிக்கல், நீரிழிவு மற்றும் பிற நாளமில்லா சுரப்பிகளிள் கோளாறுகள் ஏற்படும் என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து, University of Michigan School of Public Health-ஐ சேர்ந்த ஆய்வாளர் சங் க்யூன் பார்க் பேசுகையில், phthalates வெளிப்பாடு பெண்களுக்கு, ஆறு வருட காலத்தில் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும் என ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்றார். நீரிழிவு நோய்க்கு phthalates-கள் காரணமாக இருக்கின்றனவா என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் சுமார் 1,308 பெண்களை SWAN (Study of Women’s Health Across the Nation) ஆய்வில் இருந்து தேர்வு செய்து சுமார் ஆறு ஆண்டுகளாக ஆய்வு செய்தனர். 6 ஆண்டுகளில் சுமார் 5% பெண்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர். இந்த பெண்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரிகளில், 2000s-களின் முற்பகுதியில் அமெரிக்க நடுத்தர வயதுப் பெண்களை போலவே இந்தப் பெண்களுக்கும் சிறுநீரில் phthalates-களின் செறிவு அதிகம் இருந்ததாகவும் கூறினார்.

Kokila

Next Post

குழந்தையை கவனித்துக்கொள்ளும் உரிமை யாருக்கு?... கர்நாடகா உயர்நீதிமன்றம் கருத்து!

Sun Feb 12 , 2023
5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளிடம் ஒரு தந்தையின் உரிமையை மறுக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெங்களூரில் 7வயது சிறுமிக்கு தந்தையும் பாதுகாப்பு வழங்கலாம் என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிறுமியின் தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விஸ்வஜித் ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, குழந்தைக்கு […]

You May Like