fbpx

பெண்களே..!! இவர்களுக்கு 35 வயதிலேயே மாதவிடாய் நின்று விடுமா..? அறிகுறிகள் இதுதான்..!!

மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் இயல்பாக எதிர்கொள்ளும் உடலில் உண்டாகும் மாற்றங்கள். முந்தைய காலகட்டத்தில் 50-களின் முற்பகுதியில் இயற்கையான மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொண்டார்கள். சமீப வருடங்களாக 40 வயதுக்கு முன்பே மெனோபாஸ் நிகழ்கிறது. இவை இயற்கையான மெனோபாஸ் போலவே இருக்கும் என்றாலும் ஏன் உண்டாகிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலம் என்பது கருப்பை முட்டைகள் உற்பத்தி செய்வதை நிறுத்தும் போது நிகழும் விளைவு ஆகும்.

இந்நிலையில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருக்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்பது இனப்பெருக்க சுழற்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன். மெனோபாஸ் என்பது 12 மாதங்களாக தொடர்ந்து மாதவிடாய் வராமல் இருக்கும் போது சொல்லும் நிலை. இந்நிலையில் சூடான ஃப்ளாஷ்கள் போன்ற தொடர்புடைய அறிகுறிகள் ஏற்படும். பெரிமெனோபாஸ் என்பது மாதவிடாய் நிறுத்தத்துக்கு நீண்ட காலம் முன்பே தொடங்கும் நிலை.

மெனோபாஸ் காலம் என்பது 45 வயதுக்கு பிறகு தொடங்கும். வெகு அரிதாக சில மருத்துவ காரணங்களால் முன்கூட்டியே மாதவிடாய் நிற்கலாம். சிலருக்கு கருப்பை அகற்றம் காரணமாக மாதவிடாய் சுழற்சி இல்லாமல் போகலாம். ஆனால் எந்தவிதமான மருத்துவ காரணங்களும் இல்லாமல் தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராமல் போவது குறிப்பாக 40 வயதுக்கு முன்பு நிற்பது முன்கூட்டிய மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலை வரலாம். அதே நேரம் இது 30 வயதுக்கு முன் ஏற்படுவது அரிதானது. 35 வயதில் தொடங்கினாலும் இது முன்கூட்டிய மெனோபாஸ் தான்.

அறிகுறிகள் :

வழக்கமான சுழற்சியை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் தொடங்கும்போதே ஆரம்ப கால மெனோபாஸ் ஆக தொடங்கும். கடுமையான இரத்தப்போக்கு ஒருவாரத்துக்கும் மேலாக இரத்தப்போக்கு, இடைப்பட்ட காலங்களில் இரத்தப்போக்கு போன்றவை இருக்கும். மனம் அலைபாய்வது, பாலியல் உணர்வுகளில் மாற்றங்கள், பிறப்புறுப்பு வறட்சி, தூங்குவதில் சிக்கல், வெப்ப ஒளிக்கீற்று, இரவு வியர்வை, சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழப்பு ஆகியவையாகும்.

மாதவிடாய் காரணத்துக்கு சரியான மருத்துவ காரணங்கள் இல்லை என்றாலும் பொதுவான ஒன்றாக மரபணு சொல்லப்படுகிறது. உங்கள் குடும்ப வழக்கத்தில் உள்ள பெண்கள் எப்போது மாதவிடாய் இறுத்தத்தை தொடங்கினார்கள் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் அறிகுறிகளை தொடர்பு படுத்தி பார்க்கலாம். எனினும் மரபணு முழுமையாக இதற்கு காரணமாக இருக்காது. புகைப்பழக்கம் கொண்டிருந்தால் அது ஈஸ்ட்ரோஜனை பாதிக்கலாம். சில நம்பகமான ஆராய்ச்சிகள் நீண்ட கால அல்லது வழக்கமான புகைப்பிடிப்பவர்களுக்கு விரைவில் மெனோபாஸ் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. புகைப்பிடிக்காத பெண்களை விட புகைப்பிடிக்கும் பெண்களுக்கு 1 முதல் 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாதவிடாய் நிற்கும்.

மாதவிடாய் நிறுத்தத்தின் ஆரம்பக்கால தொடக்கம் எப்போது..?

சைவ உணவு, உடற்பயிற்சியின்மை வாழ்நாள் முழுவதும் சூரிய ஒளியில் இல்லாதது மாதவிடாய் நிறுத்தத்தின் ஆரம்ப தொடக்கத்தை ஏற்படுத்தும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் கொழுப்பு திசுக்களில் சேமிக்கப்படுவதால் ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இது குறைவாக இருக்கும். இவை விரைவில் குறைந்துவிடும். வலிப்பு நோய் கால்- கை வலிப்பு என்பது மூளையில் இருந்து உருவாகும் வலிப்பு நோய். கால், கை வலிப்பு நோய் கொண்டிருப்பவர்கள் ஆரம்ப கால கருப்பை பற்றாக்குறையை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.

Read More : கஞ்சா விற்று காதலை காப்பாற்றிய இளைஞர்..!! மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம்..!! விசாரணையில் போலீசாரே அதிர்ந்து போன தருணம்..!!

English Summary

Some research suggests that a vegetarian diet, lack of exercise, and a lifetime of lack of sunlight can cause early onset of menopause.

Chella

Next Post

பொய்யை சொல்லி அரசியல் செய்ய உனக்கு வெட்கமாக இல்லையா..? அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி...!

Wed Feb 12 , 2025
Aren't you ashamed to do politics by telling lies? Annamalai's response to the minister

You May Like