சிபிஐ எனது கட்டுப்பாட்டில் இருந்தால் பிரதமர் மோடி அமைச்சர் உள்ளிட்டோரை இரண்டு மணி நேரத்தில் கைது செய்து விடுவேன் என ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு டெல்லி அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி கைது செய்யப்பட்டார்
துணை முதலமைச்சர் கைதிக்கு கண்டனம் தெரிவித்தேன் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சய் சிங், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நன்மதிப்பை கெடுக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்க துறை மட்டும் எனது கையில் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோரை “இரண்டு மணி நேரத்தில் கைது செய்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.