fbpx

’காச கொடுத்துட்டு உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போ’..!! வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநர் மனைவியுடன் உடலுறவு..!!

கடனை திரும்பக் கொடுக்காததால் ஆட்டோ ஓட்டுநரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாவ்தா என்ற நபரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், சொன்ன தேதியில் ஆட்டோ ஓட்டுனரால் தான் வாங்கிய கடனை திரும்பதர முடியவில்லை. எனினும் விரைவில் கடனை ஒப்படைப்பதாக கூறியுள்ளார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத சாவ்தா, ஆட்டோ ஓட்டுனரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து பணத்தை கொடுக்குமாறும் அல்லது இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால், ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சியடைந்த நிலையில், அவரால் பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் இருந்துள்ளது. இதனால், சாவ்தா அடிக்கடி வீட்டுக்கு வந்து ஆட்டோ ஓட்டுனரின் மனைவியுடன் உடலுறவு வைத்து சென்றுள்ளார்.

’காச கொடுத்துட்டு உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போ’..!! வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநர் மனைவியுடன் உடலுறவு..!!

ஒரு கட்டத்துக்கு மேல் இதை பொறுக்க முடியாத ஆட்டோ ஓட்டுனர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் இந்த புகாரை விசாரிக்க மறுத்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி அவர் நீதிமன்றத்தின் முறையிட்ட நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்குள் சாவ்தா தலைமறைவாகிய நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், திடீரென ஆட்டோ ஓட்டுனரின் மனைவியை கடத்திச்சென்ற சாவ்தா, கட்டாயப்படுத்தி அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும், ஆட்டோ ஓட்டுனரையும் அவரின் ஆட்கள் தாக்கியுள்ளனர். மேலும், கணவர் தாக்கப்பட்டதை தடுக்க முயன்ற அவரின் மனைவியின் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரியதாகியதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சாவ்தாவை போலீசார் கைது செய்தனர்.

Chella

Next Post

மகளின் ஆசையை நிறைவேற்ற பெற்றோர் செய்த படுகொலை!

Thu Dec 22 , 2022
அசாம் மாநிலம் கெண்டுகுரி பகுதியைச் சேர்ந்த நிதுமோனி லாகுரஷம் என்ற பெண் 10 மாத ஆண் குழந்தையுடன் காணாமல் போனதாக கடந்த 19ஆம் தேதி காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி சரைடியோ மாவட்டத்திலுள்ள ராஜாபாரி தேயிலைத் தோட்டத்தில் நிதுமோனி உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலையை நிகழ்த்தியது ஒரு முதுமை தம்பதி என […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like