fbpx

பிளாஸ்டிக்கைக் கொடு!… தங்கத்தை எடு!… மாசுபாட்டை சமாளிக்க புதிய திட்டம்! இந்தியாவில் எங்கு தெரியுமா?

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சடிவாரா என்ற கிராமத்தில், சில காலத்திற்கு முன்பு இந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பிளாஸ்டிக் மாசுபாட்டை சமாளிக்க ஒரு தனித்துவமான பிரச்சாரத்தை தொடங்கினார். இக்கிராமத்தை பிளாஸ்டிக் மாசு இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர் பரூக் அகமது பல முயற்சிகளை செய்தார். பல முயற்சிகளுக்கு பின் அவரது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர், ‘பிளாஸ்டிக் தோ அவுர் சோனா லோ’, அதாவது பிளாஸ்டிக் கழிவுகளை கொடுங்கள்… தங்கம் வாங்கிச் செல்லுங்கள் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ், 20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளை யாராவது கொடுத்தால், பஞ்சாயத்து அவருக்கு தங்க நாணயம் வழங்கும். பிரசாரம் தொடங்கிய 15 நாட்களில் கிராமம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத கிராமமாக அறிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டம் குறித்து பேசிய பஞ்சாயத்து தலைவர், தனது கிராமத்தில் வெகுமதியாக தங்கம் வழங்கும் முழக்கத்தை ஆரம்பித்ததாகவும், அது தற்போது வெற்றியடைந்ததாகவும் கூறினார். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை சுத்தம் செய்ய நான் பல முன்முயற்சி எடுத்தேன், இப்போது கிராமத்தில் உள்ள அனைவரும் சுற்று புறத்தை சுத்தம் செய்ய எங்களுக்கு உதவியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Kokila

Next Post

ஒரே குழந்தைக்கு தாயும்!... பாட்டியும்!... எங்கே?... எப்படி தெரியுமா?... நடிகையின் நெகிழ்ச்சி பதிவு!

Sat Apr 8 , 2023
ஸ்பானிய தொலைக்காட்சி நடிகை ஒருவர், தனது இறந்த மகனின் விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்ட வாடகைத் தாய் மூலம் பிறந்த சில வாரங்களே ஆன குழந்தையை சமீபத்தில் தத்தெடுத்துள்ளார். 68 வயதான ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையான அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். இது புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணிற்கு பிறந்த குழந்தை. வாடகைத் தாயான இவருக்கு, ஸ்பானிஷ நடிகையின் இறந்து […]

You May Like